Tuesday, July 21, 2009

காற்றுக்கென்ன வேலி ?

உன்னை சிறை செய்யப் பணித்தேன்
என் நுரையீரலை,
எனக்கு குளிரைமட்டும் தந்துவிட்டு
வாட்டுகிறாய் வதைக்கிறாய்.

சூறாவளியாய் வந்தாய் சுருட்டிச் சென்றாய்
என்னவளின் மூச்சையும் சேர்த்து பலரதை
அவளின் சுவாசம் கூட என்னை தீண்டவிடமல்
செய்துவிட்டாய்...... இத்துயர் அடைய.

எனைமட்டும் விட்டுச்சென்றாய் உனை சிறை செய்ய
நானும் அவளும் ஒன்றினைய உனை என்னுள்
சிறைபிடிக்கிறேன்........

Monday, July 13, 2009

ஒற்றை வரியால் என்னை...

உன் ஒற்றை வரி வார்த்தைகள் என் உயிர் குடிக்குதடி
உன் உயிராய் நான் இருக்க ஏனடி என்னுயிர் குடித்தாய்?
அந்தவரி என்ன என் தலையெழுத்தா? இல்லை உன்னால் சிருஷ்டிக்க
பட்ட என் எதிர்காலமா?
ஏதும் அறியா ஏழையானேன்.
அறியவும் இயலா நிலையடைந்தேன்................

நீ என் வாழ்வில் வந்தது ஏனோ மவுனமாக,
பின் என் மனதை உலுக்கினாய் புயலாக,
கனவு கூட கண்டதில்லை அதுவரை
ஒரு பெண்ணின் நினைவாக.
இன்றோ நினைவும் கனவும் நீயே ஆக
நித்தம் நிகழும் நிகழ்வாக -என்னுள்,
எல்லாம் கனவு தானா என்றேன்.
ஆம், (பலிக்காது உன் கனவு) என்று சொல்கிறாய்..........
என் உயிரை கொய்து எடுக்கிறாய் அந்த ஒற்றை வரியால்.
"நான் உன்னை நினைக்கவும் இல்லை என் வாழ்வில்" எனும் இந்த வரியால்.

Tuesday, July 7, 2009

உன்மையான பாசம்


பாசத்திற்கு ஏங்கும் குழந்தை தான் நானும்.
நீயே என் பாசம், அன்பு, நேசம்.

முடிவே இல்லாததா?


என்றும் உன் நட்பு....


நீயும் எனை போல் சமமானவள் ஒரு மானுடமாக அனைத்திலும். என்னை போல் உன்னையும் என்னுவேன்.
என் தோழியே....

புன்னகை


நானும் உன் சேய் தானே........